வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.96ஆக முடிவு!

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து ரூ.83.96ஆக முடிந்தது.

News image
சித்தரிக்கப்பட்டது | இந்திய ரூபாய்
Updated On :8 ஆகஸ்ட் 2024, 1:28 pm

DIN

மும்பை: ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஒன்பதாவது நிதி கொள்கை கூட்டத்தில் வட்டி விகிகத்தின் நிலைப்பாட்டை மாற்றாமல் வைத்திருப்பதை அடுத்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 1 காசு குறைந்து ரூ.83.96ஆக முடிந்தது.

பலவீனமான உள்நாட்டு சந்தைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாய் கடும் அழுத்தத்தில் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அமெரிக்க டாலர் குறியீட்டில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய ரூபாயின் சரிவு தடுக்கப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூ.83.94 ஆக வர்த்தகம் தொடங்கிய நிலையில், இது இன்றைய வர்த்தகத்தின் குறைந்தபட்சமாக ரூ.83.97 என்ற நிலையும், அதிகபட்சமாக ரூ.83.93 என்ற நிலையில் முடிந்தது.

இறுதியாக அமெரிக்க டாலருக்கு எதிராக 83.96 ஆக நிலைபெற்றது. இது முந்தைய முடிவில் இருந்து 1 பைசா குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.