நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பங்குச் சந்தையில் ஏற்றம்! சென்செக்ஸ், நிஃப்டி இன்றும் உயர்வு!

வணிகத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (ஆக. 21) பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது.

News image
கோப்புப் படம்- ANI
Updated On :21 ஆகஸ்ட் 2024, 12:06 pm

DIN

வணிகத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (ஆக. 21) பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் இருந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 102.44 புள்ளிகள் உயர்ந்து 80,905.30 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.13 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71.35 புள்ளிகள் உயர்ந்து 24,770.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.29 சதவீதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.

அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி பங்குகள் 2.47% உயர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஏசியன் பெயின்ட்ஸ் 1.56%, ஹிந்துஸ்தான் யூனிலிவர் 1.46%, ஐடிசி 1.33%, நெஸ்ட்லே இந்தியா 1.33%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.18%, பார்தி ஏர்டெல் 0.99%, ஜேஎஸ்டபிள்யூ 0.95%, அதானி போர்ட்ஸ் 0.74%, என்டிபிசி 0.67% பங்குகள் உயர்ந்திருந்தன.

இதேபோன்று டெக் மஹிந்திரா அதிக சரிவைக் கண்டது. அதனைத் தொடர்ந்து அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல், பவர் கிர்ட், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, எச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் திவிஸ் லேப் நிறுவன பங்குகள் 3.77% உயர்ந்திருந்தன. அதற்கு அடுத்தபடியாக டைட்டன் கம்பெனி 2.47%, எஸ்பிஐ லைஃப் 2.24%, சிப்லா 2.04%, எச்டிஎஃப்சி லைஃப் 1.97%, ஹிண்டல்கோ 1.89%, ஏசியன் பெயின்ட்ஸ் 1.56%, அதானி எண்டர்பிரைசஸ் 1.47% உயர்ந்திருந்தன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.