6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய உச்சத்தில் ஆப்பிள் நிறுவன ஆண்டு வருவாய்! ரூ. 40 ஆயிரம் கோடி டாலர்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டும் எனத் தகவல்

News image
கோப்புப் படம்
Updated On :28 ஆகஸ்ட் 2024, 12:21 pm

DIN

ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வன்பொருள் மற்றும் சேவைப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி டாலர் என்ற உச்சத்தை இந்த ஆண்டில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவுன்டர் பாயின்ட் (counter point ) என்ற ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்பச் சந்தை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் குறித்த ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவன வருவாய் 40 ஆயிரம் கோடி டாலரை எட்டும் எனத் தெரிவித்துள்ளது.

2023-ல் ஆப்பிள் நிறுவனம் சரிவைச் சந்தித்த நிலையில், வன்பொருள் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் 3% அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததாகவும் கவுன்டர் பாயின்ட் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி வன்பொருள் மற்றும் மின்னணு பிரிவில் ஐ-போன், ஐ-பேட், மேக், கடிகாரம், ஏர்பாட்ஸ் உள்ளிட்ட மின்னணு பொருள்களின் மேம்படுத்தப்பட்ட அறிமுகம் வளர்ச்சிக்கு வித்திட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ், இந்த ஆண்டின் அதிக வளர்ச்சி கொண்ட தயாரிப்பாக உள்ளது.

இது குறித்து பேசிய கவுன்டர் பாயின்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் தருண் பதாக், வளர்ச்சி விகிதங்களின் அடிப்படையில், ஆப்பிள் செய்யறிவு தொழில்நுட்ப அறிமுகத்துடன் சேவைப் பிரிவு மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.

எனினும் வருவாய் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு வன்பொருள்கள் உற்பத்தியே துணை புரிகிறது. 2023 வீழ்ச்சிக்குப் பிறகு, அறிமுகப்படுத்தப்பட்ட வன்பொருள், மின்னணு பொருள்களின் வருகையே இந்த ஆண்டு வருவாய் அதிகரிப்புக்கு காரணம் எனக் குறிப்பிட்டார்.

மேலும், 2025-ல் சேவைக்கான வருவாய் 100 பில்லியன் டாலர் என்ற இமாலய இலக்கை எட்டும் எனவும் கவுன்டர் பாயின்ட் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.