நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

5 நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விடும் செபி!

முதலீட்டாளர்களிடமிருந்து வசூலித்த பணத்தை மீட்பதற்காக, பிஷால் குழுமம் மற்றும் சுமங்கல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் 28 சொத்துகளை, செபி ஜனவரி 27ஆம் தேதி ஏலம் விடவுள்ளது.

News image

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)

Updated On :23 டிசம்பர் 2024, 7:36 pm IST

புதுதில்லி: முதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக வசூலித்த பணத்தை மீட்பதற்காக, பிஷால் குழுமம் மற்றும் சுமங்கல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் 28 சொத்துகளை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஏலம் விடவுள்ளது.

இந்த சொத்துகள் ரூ.28.66 கோடிக்கு இருப்பு விலைக்கு ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரவி கிரண் ரியாலிட்டி, மங்களம் அக்ரோ மற்றும் புருசத்தம் இன்ஃபோடெக் ஆகிய நிறுவனங்களின் சொத்துகள் அடங்கும்.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நிலங்கள், மனைகள் மற்றும் கட்டிட கட்டமைப்புகளுடன் கூடிய நிலம் ஆகியவை ஏலத்தில் விடப்படும்.

இந்த சொத்துகள் ரூ.28.66 கோடி இருப்பு விலையில் ஏலம் விடப்படும் என்று இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான - செபி டிசம்பர் 19 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஐந்து நிறுவனங்களுக்கும், அவற்றின் இயக்குநர்களுக்கு எதிரான மீட்பு நடவடிக்கைகளில், சொத்துகளை விற்பனை செய்வதற்கான ஏலங்களை சந்தை கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது செபி.

முதலீட்டாளர்களின் பணத்தை மீட்கும் செபியின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து விற்பனையில் உதவ அட்ராய்ட் டெக்னிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தை ஒழுங்குமுறை ஆணையம் நியமித்துள்ளது.

இந்த ஏலம் ஜனவரி 27, 2025 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைனில் நடத்தப்படும் என்று செபி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.