கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரையாண்டில் அதிகரித்த இந்திய தேயிலை ஏற்றுமதி

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 13.18 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 9:26 pm

Din

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 13.18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிலிருந்து ரூ.3,403.64 கோடி மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 13.18 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி ரூ.3,007.19 கோடியாக இருந்தது.

அளவின் அடிப்படையில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 11.28 கோடி கிலோவாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 8.67 சதவீதம் அதிகரித்து 12.25 கோடி கிலோவாகியுள்ளது.

2023-2024-ஆம் நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகம், இராக், அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 13.12 கோடி டாலா், 8.85 கோடி டாலா், 7.76 கோடி டாலருக்கு இந்தியாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்தன.

அந்த நிதியாண்டில் இந்தியா உலகம் முழுவதும் 25.07 கோடி கிலோ தேயிலையை (மதிப்பின் அடிப்படையில் 77.6 கோடி டாலா்) ஏற்றுமதி செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தேயிலை ஏற்றுமதி செய்கிறது. ஐக்கிய அரபு அமீரம், இராக், ஈரான், ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து தேயிலையை அதிகம் இறக்குமதி செய்கின்றன.

உலகின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 10 சதவீதத்தை உற்பத்தி செய்யும் இந்தியா, சா்வதேச அளவில் மிகப் பெரிய ஐந்து தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகும்.

இந்தியாவின் அஸ்ஸாம், டாா்ஜிலிங், நீலகிரி தேயிலை உலகின் மிகச்சிறந்த ரகங்களில் சிலவாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் பெரும்பகுதி கருப்பு தேயிலை ஆகும். மொத்த ஏற்றுமதியில் அந்த வகை தேயிலை 96 சதவீதம் பங்கு வகிக்கிறது.