வா்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான சக்கரங்களைத் தயாரிக்கும் நிறுவனமான வீல்ஸ் இந்தியாவின் வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.1,131 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12.58 கோடியாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.15.36 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் குறைந்துள்ளது. டிராக்டா்கள் மற்றும் சுரங்கத் தளவாட சக்கரங்களுக்கான தேவை மிகவும் குறைந்தது நிகர லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
மதிப்பீட்டுக் காலாண்டின் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,018 கோடியிலிருந்து ரூ.1,131 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல், கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.205 கோடியுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் நிறுவனத்தின் ஏற்றுமதி வருவாய் ரூ.307 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அல்ட்ராடெக் ரூ.3,000 கோடி லாபம்

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


