ஆட்டோ, ஐடி பங்குகளில் லாபப் பதிவு: 379 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை லாபப் பதிவால் எதிர்மறையாக முடிந்தது.  இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 379  புள்ளிகளை இழந்தது.
ஆட்டோ, ஐடி பங்குகளில் லாபப் பதிவு: 379 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
Updated on
1 min read

மும்பை /  புது தில்லி:   புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை லாபப் பதிவால் எதிர்மறையாக முடிந்தது.  இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 379  புள்ளிகளை இழந்தது.

உள்நாட்டுச் சந்தையில் திங்கள்கிழமை கடைசி நேரத்தில் விற்பனை அதிகரித்த நிலையில், அதன் தாக்கம் செவ்வாய்க்கிழமை காலையிலும் தொடர்ந்தது.   ஐடி, வங்கி, ஆட்டோ, நிதி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன.  இருப்பினும், பிற்பகலில்  ஃபார்மா, ஹெல்த் கேர், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்ததால் பெரும் சரிவு தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இறுதியில் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. 

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு  ரூ. 71 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.365.18 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.855.80  கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர். அதே சமயம்,  உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.410.46 கோடிக்கு பங்குகளை  வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ்  சரிவு: காலையில் 60.91 புள்ளிகள் கூடுதலுடன்  72,332.85}இல் தொடங்கிய சென்செக்ஸ் அதற்கு மேலே செல்லவில்லை.  பின்னர், 71,613.74 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 379.46 புள்ளிகளை (0.53 சதவீதம்)  இழந்து 71,892.48}இல்  நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,929 பங்குகளில் 1,992 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,811 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 126 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை வீழ்ச்சி: 

சென்செக்ஸ் பட்டியலில் சன்ஃபார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன், ஐடிசி,  பவர்கிரிட் ஆகிய 8 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், அல்ட்ரா டெக், கோட்டக் வங்கி, எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ உள்பட 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 76 புள்ளிகள் 

இழப்பு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 9.45  புள்ளிகள் கூடுதலுடன்  21,751.35}இல் தொடங்கி 21,755.60  வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர்,  21,556.65 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 76.10 புள்ளிகளை (0.35 சதவீதம்) இழந்து 21,665.80}இல் நிறைவடைந்தது.  நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com