செயற்கை நுண்ணறிவை கையிலெடுத்திருக்கும் சாம்சங்: சபாஷ் சரியான போட்டி

சாம்சங் தனது கேலக்ஸி ஃபோன்களில் அதிகளவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் புதிய போட்டியைத் தொடக்கிவைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவை கையிலெடுத்திருக்கும் சாம்சங்: சபாஷ் சரியான போட்டி

சாம்சங் தனது கேலக்ஸி ஃபோன்களில் அதிகளவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் புதிய போட்டியைத் தொடக்கிவைத்துள்ளது.

இந்த ஆண்டில், ஸ்மார்ட்ஃபோன்கள் மேலும் ஸ்மார்ட்டாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. காரணம், சாம்சங் நிறுவனம் தனது காலக்ஸி வகை கைப்பேசிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தவிருக்கிறது. 

ஆப்பிள் மற்றும் அதன் ஐஃபோனுக்கு மிகப்பெரிய போட்டியாளரான சாம்சங், அதன் முதன்மையான கேலக்ஸி மாடல்களின் அடுத்த தலைமுறை ஃபோன்கள் குறித்து புதன்கிழமை ஸ்மார்ட்போன்கள் எவ்வாறு உருவாகின்றன என்ற ஒரு விளக்கத்தை வழங்கியிருந்தது.

காலக்ஸி எஸ்24 வரிசைக்கான விற்பனை விகிதமானது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய அம்சங்களின் நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து அமைந்துள்ளது.

தொழில்நுட்ப நிலையை நாங்கள் மாற்றியமைப்போம், உங்கள் திறனை வெளிக்கொணர எந்தத் தடையும் இல்லாமல் புதிய அத்தியாயத்தைத் திறப்போம்" என்று சாம்சங்கின் மொபைல் பயன்பாட்டுப் பிரிவின் தலைவர் டிஎம் ரோஹ், கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு சாம்சங் மேற்கொண்ட சொந்த உருவாக்கங்களைத் தவிர்த்து, காலக்ஸி எஸ்24 வரிசையானது கூகுளில் இருந்து வெளிவரும் சில முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com