வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கியா இந்தியா விற்பனை 21,300-ஆக அதிகரிப்பு

காா் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 21,300-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2024, 9:06 pm

Din

காா் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 21,300-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனம் 21,300 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 19,391-ஆக இருந்தது.

நிகழ் ஆண்டின் முதல் பாதியில் நிறுவனத்தின் விற்பனை 1,26,137-ஆகப் பதிவாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தைவிட இது 6 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.