சந்திரபாபு நாயுடு பேட்டி எதிரொலி: சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்வு
பங்குச் சந்தைகளில் இன்று ஏறுமுகத்தில் வணிகம்.


மும்பை: பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில், சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 22,300 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகின.
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் இன்று முற்பகல் 11 மணிக்கு 1.400 புள்ளிகள் உயர்ந்து 73,571 புள்ளிகளுக்கு வணிகமானது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, 508 புள்ளிகள் உயர்ந்து 22,393 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின.
நேற்று ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து பங்குச் சந்தை இன்று மீண்டுள்ளது.
பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு நீடிப்பதாக ஆந்திர மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது உறுதி அளித்த நிலையில், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் அது எதிரொலித்தது. பங்குச் சந்தைகள் முன்னேற்றத்துடன் வர்த்தகமாகின.
நேற்று வீழ்ச்சி
மக்களவைத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து பங்குச்சந்தை நேற்று கடும் சரிவைச் சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் வீழ்ச்சியை எதிா்கொண்டன.
வா்த்தக முடிவில் சென்செக்ஸ் 4,390 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. இதையடுத்து, ஒரே நாளில் சந்தை மூல தன மதிப்பு ரூ.31.08 லட்சம் கோடி குறைந்தது. சந்தை மூல தன மதிப்பு ரூ.31.08 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.394.84 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு ரூ.31.08 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.6,850.76 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,913.98 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...