
பங்குச் சந்தையின் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் வரவிருக்கும் பட்ஜெட்டை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றும் உயர்ந்து முடிந்தது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதி சேவைகள் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளின் லாபங்களால் உந்தப்பட்டு, இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 ஆனது வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் 23,490 என்ற புதிய வாழ்நாள் உயர்வை எட்டியது.
இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து 76,992 ஆகவும், நிஃப்டி 66.70 புள்ளிகள் உயர்ந்து 23,465 ஆகவும் இருந்தது. அதில் 2,134 பங்குகள் ஏற்றத்திலும், 1,641 பங்குகள் இறக்கத்திலும், 106 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
நிஃப்டி ஆட்டோ துறையால், இன்றைய வர்த்தகம் சிறப்பாக செயல்பட்ட நிலையில், மகேந்திரா & மகேந்திரா, பாரத் ஃபோர்ஜ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றால் சென்செக்ஸ் 1.3 சதவிகிதம் உயர்ந்தது. இதற்கிடையில் ஐடி துறையின் குறிப்பிட்ட சில பங்குகளால் நிஃப்டி குறியீடுகள் பாதிக்கப்பட்டு 1 சதவிகிதம் சரிந்தது.
வாகன துறையின் போக்கு நேர்மறையாக உள்ளது என்று நிலையில் இன்றைய வர்த்தகத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது. இந்த அலையானது இரு சக்கர வாகன துறையிலும் எதிர் ஒலித்தது என்றார் ஐடிபிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் & செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் பிரிஜேஷ் அயில். அதே வேளையில் ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதாகவும், இதில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் பங்குகள் மேற்கொள்ளவில்லை என்பதையும் நீண்ட கால அட்டவணை மூலம் சுட்டி காட்டியுள்ளார். எனினும் சந்தை மீண்டும், மீண்டும் பலம் பெறுவதால் இந்தப் பங்குகள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகின்றன என்றார் பிரிஜேஷ்.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 பங்குகளில் டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி, பஜாஜ் பின்செர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதே வேளையில் டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற பங்குகள் சரிந்து வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில், சியோல் உயர்ந்தும், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து வர்த்தகமானது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.41 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 82.41 டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.