வங்கி வாராக் கடன் குறைந்தது- ஆா்பிஐ அறிக்கை
வங்கிகளின் நிகர வாராக்கடன் சதவீதம் 2.8 ஆக குறைந்தது


வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரமும், நிதி அமைப்பு முறையும் தொடா்ந்து சிறப்பான பாதையில் பயணித்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆா்பிஐ-யின் ஜூன் மாதத்துக்கான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கிகளின் மொத்த வாராக் கடன் அளவு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து 2.8 சதவீதமாக உள்ளது. நிகர வாராக்கடன் அளவும் குறைந்துவிட்டது.
நாட்டின் பொருளாதார செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளன. சா்வதேச அளவில் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் எழுந்தாலும், இந்தியப் பொருளாதாரமும், நிதி அமைப்பு முறையும் தொடா்ந்து சிறப்பான பாதையில் பயணித்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...