பங்குச் சந்தைகளில் மீண்டும் உற்சாகம்

பங்குச் சந்தைகளில் மீண்டும் உற்சாகம்

இந்திய பங்குச் சந்தைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பாா்தி ஏா்டெல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டியும் வெள்ளிக்கிழமை மீண்டும் உயா்ந்தன.

இது குறித்து பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்ததாவது:

பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை உலகளாவிய சந்தைக்குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. அது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக கடந்த சில வா்த்தக தினங்களாக சரிவைச் சந்தித்துவந்த பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றமடைந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயா்வு: முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 71.28 புள்ளிகள் அதிகமாக 72,475.45-இல் தொடங்கிய மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,946.54 வரையிலும், குறைந்தபட்சமாக 72,366.29 வரையிலும் சென்றது. இறுதியில் 260.30 (0.36 சதவீதம்) புள்ளிகள் அதிகமாக சென்செக்ஸ் 72,664.47-இல் நிறைவடைந்தது.

22,055-ஆக உயா்ந்த நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 33.45 புள்ளிகள் அதிகமாக 21,990.95 -இல் தொடங்கி அதிகபட்சமாக 22,131.30 வரையிலும், குறைந்தபட்சமாக 21,950.30 வரையிலும் சென்றது. இறுதியில் 97.70 (0.44 சதவீதம்) புள்ளிகள் அதிகமாக நிஃப்டி 22,055.20-இல் நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com