
வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம்&எம்), அதன் மின்சார வாகன உற்பத்தி பிரிவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில், மஹிந்திரா எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடட் (எம்இஏஎல்) நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
போதுமான முதலீட்டை ஏற்பாடு செய்துள்ள மஹிந்திரா கூடுதலாக நிதி திரட்ட போவதில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (பிஐஐ) ரூ.1200 கோடி மஹிந்திராவில் மின்சார கார்கள் உற்பத்தி துணை நிறுவனமான எம்இஏஎல்-லில் முதலீடு செய்துள்ளது.
சிங்கப்பூரை மையமாக கொண்ட டெமாசெக் நிறுவனம் ரூ.300 கோடி ஏற்கெனவே முதலீடு செய்துள்ள நிலையில் ஒப்புக்கொண்ட ரூ.900 கோடி முதலீட்டை காலக்கெடுவுக்குள் அளிக்கவுள்ளதாகவும் ஆவணத்தில் எம்&எம் தெரிவித்துள்ளது.
எம்இஏஎல் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.3,207.14 கோடியாக உள்ளது. 2022 அக்டோபரில் லிமிடட் நிறுமமாக நிறுவப்பட்ட இதன் செயல்பாடுகள் மூலமாக கடந்த நிதியாண்டு ஈட்டப்பட்ட வருவாய் எதுவுமில்லை என தெரிவித்துள்ளது, மஹிந்திரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.