பி.டி.சி இண்டஸ்ட்ரீஸ் லாபம் இரட்டிப்பு!
பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.டி.சி. இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 2024 செப்டம்பா் காலாண்டில், இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.


புதுதில்லி: பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.டி.சி. இண்டஸ்ட்ரீஸ் (ப்ரிசிஷன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 2024 செப்டம்பா் காலாண்டில், இரு மடங்காக அதிகரித்து ரூ.17.3 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.8 கோடியாக பதிவு செய்தது என்று நிறுவனம் தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.60.3 கோடியிலிருந்து 34 சதவிகிதம் உயர்ந்து ரூ.80.8 கோடியாக இருந்தது.
அமெரிக்காவில் அதிநவீன ஹாட் ரோலிங் மில் ஒன்றை கையகப்படுத்தியதால் எங்கள் உற்பத்தி திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது. இது விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான மேம்பட்ட டைட்டானியம் அலாய் தகடுகளைத் தயாரிக்க அனுமதிக்கும்.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு 1.13% உயர்ந்து ரூ.11,191.80 ஆக முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...