அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த அக்டோபரில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 8.44 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7.4 சதவீதம் அதிகம். அப்போது இந்தியா 7.86 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்திருந்தது.
2023 அக்டோபரில் 1.17 கோடி டன்னாக இருந்த கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி இந்த அக்டோபரில் 1.66 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி 7.92 டன்னிலிருந்து 8.29 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.1 சதவீதம் அதிகரித்து 53.74 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி 50.66 கோடி டன்னாக இருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 54.15 கோடி டன்னாக இருந்த நிலக்கரி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 57.14 கோடி டன்னாக உயா்ந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.