ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ.10,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.10,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2024, 12:11 am

DIN

புது தில்லி: உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.10,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்கட்டமைப்பு கடன் பத்திர விற்பனை மூலம் வங்கி திங்கள்கிழமை ரூ.10,000 கோடி திரட்டியுள்ளது. அந்த வகை கடன் பத்திரங்களை வங்கி வெளியிடுவது இது ஏழாவது முறை. இந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.23 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.

ரூ.5,000 மூலதனம் திரட்டுவதற்கான இந்த கடன் பத்திர வெளியிட்டின்போது, ஒதுக்கீட்டை விட இரு மடங்கும் மேல், ரூ.11,500 கோடி மதிப்பிலான பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. அதையடுத்து, ரூ.10,000 கோடிக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்தக் கடன் பத்திரங்களில் பெரும்பாலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள், சேமநல நிதி மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புகள் உள்ளிட்டவை முதலீடு செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.