புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை! மீடியா, ஐடி பங்குகள் உயர்வு!

மீடியா மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் உயர்வுடன் இருந்தன.

News image
கோப்புப் படம்
Updated On :19 நவம்பர் 2024, 4:57 am

DIN

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (நவ. 19) உயர்வுடன் தொடங்கியது. வணிகநேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 451 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 23,700 புள்ளிகளுக்கு மேலும் இருந்தது.

மீடியா மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் உயர்வுடன் இருந்தன.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 1,008.05 புள்ளிகள் உயர்ந்து 78,347.06 புள்ளிகளாக வணிகம் இருந்தது. மொத்த வணிகத்தில் இது 1.32 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 298.90 புள்ளிகள் உயர்ந்து 23,756.10 புள்ளிகளாக வணிகம் இருந்தது. இது மொத்த வணிகத்தில் 1.28 சதவீதம் உயர்வாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் 77,548 புள்ளிகளான சென்செக்ஸ் தொடங்கியது. இந்த நேர்மறையான தொடக்கன் இன்று அனைத்துத் துறை பங்குகளிலும் எதிரொலித்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 28 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுட்ன இருந்தன. இரண்டு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக எம்%எம் நிறுவனப் பங்குகள் 3.62% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக அதானி போர்ட்ஸ் 3.2%, டாடா மோட்டார்ஸ் 2.87%, டெக் மஹிந்திரா 2.83%, டைட்டன் கம்பெனி 2.79%, டிசிஎஸ் 2.43%, இந்தஸ்இந்த் வங்கி 2.29%, எச்.டி.எஃப்.சி வங்கி 2.07%, இன்ஃபோசிஸ் 1.9% உயர்ந்திருந்தது.

பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் சரிவுடன் இருந்தன.

நிஃப்டி பட்டியலில் ஜீ என்டர்டெயின்மென்ட்ஸ், கிர்லோஸ்கர், ஷினிடர், ரத்தன் இந்தியா, டேட்டா பார்ட்னர்ஸ், அபர் இன்டஸ்ட்ரீஸ், திரிவேனி டர்பைன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

ஐடி, ரியாலிட்டி, மீடியா துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

ஆசிய சந்தைகளில் ஷாங்காய் பங்குச் சந்தை தவிர டோக்கியோ, ஹாங் காங், சியோல், பாங்காக் ஆகிய பங்குச் சந்தைகளும் உயர்வுடன் காணப்பட்டன.

நவ. 18ஆம் தேதியான நேற்று ரூ. 15,659 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.