
ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவின் நிகர லாபம் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 23 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,745.7 கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து 4ஜி மற்றும் 5ஜி நீட்டிப்பு ஒப்பந்தத்தை வென்ற நோக்கியா!
இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.2,229.6 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
2022- 23-ஆம் நிதியாண்டில் ரூ.49,321.8 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் மதிப்பீட்டு நிதியாண்டில் 36 சதவீதம் அதிகரித்து ரூ.67,121.6 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.