ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து 4ஜி மற்றும் 5ஜி நீட்டிப்பு ஒப்பந்தத்தை வென்ற நோக்கியா!

இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சாதனங்களை நிறுவுவதற்காக நீட்டிப்பு ஒப்பந்தத்தை நோக்கியா வென்றுள்ளது என்று ஏர்டெல் நிறுவனம் தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோக்கியா
நோக்கியா
Published on
Updated on
1 min read

இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சாதனங்களை நிறுவுவதற்காக நீட்டிப்பு ஒப்பந்தத்தை நோக்கியா வென்றுள்ளது என்று ஏர்டெல் நிறுவனம் தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் இணைப்பு தீர்வுகள் மேம்படுத்தப்படும் என்றார் பார்தி ஏர்டெல் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல். இந்த ஒப்பந்தமானது ஏர்டெல்லின் 5ஜி திறனை மேம்படுத்துவதாகவும், அதன் நெட்வொர்க் பரிணாமத்தை ஆதரிப்பதாகவும் உறுதியளிக்கிறது.

நோக்கியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் இது குறித்து தெரிவித்ததாவது:

இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது. இது ஏர்டெல்லின் நெட்வொர்க்கின் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தும். அதே வேளையில் பிரீமியம் 5ஜி இணைப்பு மற்றும் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு உயர்தர சேவையை வழங்க இது உதவும் என்றார்.

இதையும் படிக்க: பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் உச்சம் தொட்ட முதலீடு

நெட்வொர்க் உபகரணங்கள் வழங்குவதில் 20 ஆண்டுகால கூட்டணியில் உள்ள நோக்கியா, சமீபத்தில் ஏர்டெல்லின் நெட்வொர்க்கின் ஆற்றல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் 'பசுமை 5 ஜி முன்முயற்சியை' அறிமுகப்படுத்தியுள்ளது.

சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் மற்றும் நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட அதன் தொலைத்தொடர்பு உபகரண சப்ளையர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. அதே வேளையில் ஆகஸ்ட் 2022ல் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைப் போலவே, இந்த நிறுவனங்கள் ஏர்டெல்லின் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளுக்கான புதிய உபகரணத் தேவைகளில் முறையே 50 சதவிகிதம், 45 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிதத்தை வழங்கும்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி, நெட்வொர்க்கை கண்காணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும், நோக்கியாவின் மாண்டரே நெட்வொர்க் நிர்வாகத்தையும் மேம்படுத்துவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி

இந்த ஆண்டு பார்தி ஏர்டெல் பங்குகள் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. கடந்த மாத இறுதியில், செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன் நிகர லாபம் 167 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,593 கோடியாக இருந்தது. செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12 சதவிகிதம் உயர்ந்து ரூ.41,473 கோடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com