/

சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!

'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.

News image

சோமேட்டோ நிறுவனம்

Updated On :25 நவம்பர் 2024, 6:18 pm IST

புதுதில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் இந்த பங்கின் விலை 3.58% உயர்ந்து ரூ.273.60 ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் இந்த பங்கானது 7.62% உயர்ந்து ரூ.284.30 ஆக நிலைபெற்றது.

டிசம்பர் 23ஆம் தேதியன்று ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீலுக்கு பதிலாக சோமேட்டோ பங்குகள், சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும். இது பிஎஸ்இ-யின் துணை நிறுவனமான ஆசியா இன்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிவித்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும். இந்த மாற்றங்கள் டிசம்பர் 23, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஆசிய குறியீடு அறிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனப் பங்குகள் 2.40 சதவிகிதம் சரிந்து ரூ.953.35 முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.