இரும்புத் தாதின் விலையை உயர்த்திய என்.எம்.டி.சி.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட என்.எம்.டி.சி. நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும்.
என்.எம்.டி.சி.
என்.எம்.டி.சி.
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட என்.எம்.டி.சி. நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இது நாட்டின் 20 சதவிகித தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) இன்று அதன் மொத்த இரும்பு தாதின் விலையை டன்னுக்கு ரூ.400 உயர்த்தியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 65.5 சதவிகித இரும்பு உள்ளடக்கம் கொண்ட மொத்த தாதுவின் விலையானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் நிர்ணயிக்கப்பட்ட டன்னுக்கு ரூ.5,350 லிருந்து ரூ.5,750 ஆக உயர்த்தியுள்ளது.

அதே வேளையில், 64 சதவிகிதம் மற்றும் அதற்கும் குறைவான இரும்பு தாதின் விலையானது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட டன்னுக்கு ரூ.4,610 லிருந்து ரூ.5,010 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

என்.எம்.டி.சி.
மாருதி சுஸுகி விற்பனை 2 சதவிகிதம் அதிகரிப்பு!

இந்த விலைகள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், ராயல்டி மற்றும் மாவட்ட கனிம நிதி மற்றும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை ஆகியவற்றிற்கான பங்களிப்புகளை இது உள்ளடக்கியது என்றது. இதில் செஸ், வன அனுமதி கட்டணம் மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

பிக்மின்ட் இன் கூற்றுப்படி, சீனா சமீபத்தில் அதன் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஊக்கத்தை அறிவித்ததையடுத்து, உலகளாவிய இரும்புத் தாது விலை உயர்வுக்கு ஏற்ப தற்போது அதன் உயர்வு விலை உள்ளது.

இந்த நிலையில், சீன அரசு தனது நிதித் தொகுப்பை அறிவித்த பிறகு கடந்த ஒரு வாரத்தில் உலகளாவிய சந்தையில் இரும்புத் தாது விலை சுமார் 15 முதல் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com