
புதுதில்லி: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, 'ஹிட்டாச்சி எனர்ஜி' நிறுவனம், இந்தியாவில் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா ஆனது ஹிட்டாச்சி எனர்ஜியின் ஒரு பிரிவாகும்.
மின்மாற்றிகளின் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் போர்ட்ஃபோலியோவை அதிகரிப்பதற்காக இந்த முதலீடுகள் உகந்ததாக இருக்கும் என்று ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியாவின், தலைமை நிர்வாக அதிகாரியான என். வேணு தெரிவித்துள்ளார்.
பெரிய, சிறிய மற்றும் இழுவை மின்மாற்றிகள் உருவாக்குவதற்கு 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2,000 கோடி முதலீடு செய்யப்படும். இது தவிர, இன்சுலேஷன் திறனை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள எச்.வி.டி.சி (HVDC) உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த முதலீடு உதவும்.
தொழில்கள், பயன்பாடுகள், போக்குவரத்து ஆகிய துறைகளிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க் கட்டமைப்பதில், நாங்கள் கவனம் செலுத்துவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.