பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிவுடன் முடிவு!

வாரத்தின் 3வது வணிக நாளான இன்று, பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :9 அக்டோபர் 2024, 11:25 am

DIN

வாரத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (அக். 9) பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தது.

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்திருந்தது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 10வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் உள்ளது.

இதனால் வணிக நேரத் தொடக்கத்தில் பங்குகள் ஏற்றம் கண்டன. எனினும் அந்த ஏற்றம் நீடித்து நிலைக்கவில்லை. பிற்பாதியில் சரியத் தொடங்கியது.

வணிக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்து 81,467.10 புள்ளிகளாக நிலைப்பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.21 சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 31.20 புள்ளிகள் குறைந்து 24,981.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.12% சரிவாகும்.

வணிக நேர தொடக்கத்தில் 81,954.58 புள்ளிகளுடன் இருந்த சென்செக்ஸ், படிப்படியாக 82,319.21 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோன்று அதிகபட்சமாக 81,342.89 புள்ளிகள் வரை சரிந்தது. எனினும் வணிக நேர முடிவில் 167.71 குறைந்து 81,467.10 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

பங்குகளின் ஏற்ற, இறக்கம்

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் 2.11%, எஸ்பிஐ 2.05%, மாருதி சுசூகி 1.83%, டெக் மஹிந்திரா 1.83%, பஜாஜ் ஃபைனான்ஸ் 1.58%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.57%, ஆக்சிஸ் வங்கி 1.47%, பாரதி ஏர்டெல் 1.25%, எச்சிஎல் டெக் 1.14% உயர்ந்திருந்தன.

இதேபோன்று ஐடிசி நிறுவனப் பங்குகள் -3.20% சரிந்திருந்தது. இதர்கு அடுத்தபடியாக நெஸ்ட்லே இந்தியா -2.55%, எச்யுஎல் -1.77%, ரிலையன்ஸ் -1.63%, இந்தஸ்இந்த் -1.33%, எல்&டி -1.29%, எச்டிஎஃப்சி வங்கி -1.09% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஜேபி பவர் 10.50%, குஜராத் அபுஜா 9.31%, ரிட்ஸ் 8.25%, சிடிஎஸ்எஸ் 8.06%, டிவிஸ் லேப் 7.99%, டொரெண்ட் பவர் 6.53% ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

ஐடிசி, ஃபினோலக்ஸ், ஷோபா, பார்தி ஹெக்சகன், டாடா கம்யூனிகேசன், நெஸ்ட்லே இந்தியா, ஜேகே சிமெண்ட், அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவுடன் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.