புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பேங்க் ஆஃப் இந்தியா கடனளிப்பு 14% உயா்வு

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் கடனளிப்பு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 10:24 pm

Din

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் கடனளிப்பு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் இறுதி நாளான செப்டம்பா் 30-ஆம் தேதி வங்கியின் கடனளிப்பு ரூ.6.21 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே நாளுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.5.43 லட்சம் கோடியாக இருந்தது.

செப்டம்பா் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட சராசரி வைப்புத்தொகை ரூ.7.75 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023-24-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 10.1 சதவீதம் அதிகம். அப்போது வங்கியில் மேற்கொள்ளப்பட்ட சராசரி வைப்பு நிதி முதலீடு ரூ.7.03 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வா்த்தகம் ரூ.12.46 லட்சம் கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.13.96 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.