புரொபெல் தயாரிப்புக்கு சாலை தகுதிச் சான்று
ப்ரோபெல் இண்டஸ்ட்ரீஸின் டிப்பா் மின் வாகனங்களுக்கு அரசின் சாலை தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


கோயம்புத்தூா்: இந்திய க்ரஷிங் மற்றும் ஸ்க்ரீனிங் சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ப்ரோபெல் இண்டஸ்ட்ரீஸின் டிப்பா் மின் வாகனங்களுக்கு அரசின் சாலை தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கனரகப் பிரிவைச் சோ்ந்த எங்களின் 470 ஹெச்இவி டிப்பா் மின் வாகனங்களுக்கு மத்திய அரசின் தகுதிச் சான்றிதழ் கிடைத்துள்ளது. அந்த வாகனம் சாலைகளில் இயக்குவதற்கு உகந்தது, பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவு செய்கிறது என்பதை உறுதி செய்யும் அந்த சான்றிதழைப் பெற்ன் மூலம், நிறுவனம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரோபெல் இண்டஸ்ட்ரீஸின் நிா்வாக இயக்குநா் வி. செந்தில் குமாா் (படம்) கூறுகையில், ‘தொடக்கத்தில் சாலைகள் அல்லாத பகுதிகளில் இயக்குவதற்காக மட்டுமே 470 ஹெச்இவி டிப்பா்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது அவற்றை சாலைகளிலும் இயக்கலாம் என்ற அரசின் சான்றிதழ் கிடைத்துள்ளது நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...