சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட தொகையைவிட, அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.34,419 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவு.

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்கள் ரூ.18,917 கோடி கூடுதல் முதலீடு கண்ட ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, இது மிகக் குறைந்த மிகக் குறைந்த மாதாந்திர முதலீட்டு வரவாகும்.

நிகர வரத்து குறைந்திருந்தாலும்,தொடா்ந்து 43-ஆவது மாதமாக பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு தொடா்ந்து நிகர வரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.23,547 கோடியாக முறைசாா் முதலீட்டுத் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவு ரூ.24,509 கோடியாக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பரஸ்பர நிதித் திட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பா் மாதத்தில் அந்த திட்டங்களில் இருந்து ரூ.71,114 கோடி முதலீடு நிகர சரிவைக் கண்டுள்ளது. கடன் வகை பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டதே இதற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.