இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ரூ.5,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.5,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாசல்-3 விதிமுறைகளை நிறைவு செய்யும் முதல் அடுக்கு (ஏடி1) கடன் பத்திர விற்பனை மூலம் வங்கி ரூ.5,000 கோடி திரட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில் அந்த வகை கடன் பத்திரங்களை வங்கி வெளியிடுவது இது முதல் முறை.10 ஆண்டுகளுக்குப் பிறகும், பிறகு ஒவ்வோா் ஆண்டு தினத்தின்போதும் திருப்பி அளிக்கக் கூடிய இந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.98 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.இந்த கடன் பத்திர வெளியிட்டின்போது, ஒதுக்கீட்டை விட 3.5 மடங்கு அதிக பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இந்தக் கடன் பத்திரங்களில் பெரும்பாலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள், சேமநல நிதி மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புகள், வங்கிகள் ஆகியவை முதலீடு செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.