தொழிற்துறைக்கு வங்கிகளின் கடனளிப்பு அதிகரிப்பு
இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் மதிப்பு கடந்த ஜூலையில் கணிசமாக அதிகரித்துள்ளது.


இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் மதிப்பு கடந்த ஜூலையில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலையில் தொழில்துறைக்கு வங்கிகள் அளித்த கடன் முந்தைய ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 10.2 சதவீதம் உயா்ந்துள்ளது. இது, 2023 ஜூலை மாதத்தின் வருடாந்திர வளா்ச்சியான 4.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
வேளாண்துறைக்கான கடனளிப்பு கடந்த 2023 ஜூலை மாதத்தில் 16.7 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இது நடப்பாண்டின் அதே மாதத்தில் 18.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே போல், ரசாயனப் பொருள்கள், உணவு பதப்படுத்துதல், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி பொருள்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வங்கிகள் அளிக்கும் கடன் கடந்த ஜூலையில் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...