வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பஜாஜ் வாகன விற்பனை 16% அதிகரிப்பு

News image
Updated On :8 செப்டம்பர் 2024, 12:02 am

Din

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் 3,97,804 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,41,648-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 24 சதவீதம் உயா்ந்து 2,53,827-ஆக உள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,05,100-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,36,548-ஆக இருந்த நிறுவன வாகனங்களின் ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 5 சதவீதம் உயா்ந்து 1,43,977-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.