பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோல் இந்தியா உற்பத்தி 12% சரிவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் குறைந்துள்ளது.

News image
கோல் இந்தியா
Updated On :9 செப்டம்பர் 2024, 10:27 pm

DIN

புது தில்லி: அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்டில் நிறுவனத்தின் உற்பத்தி 4.61 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 11.9 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் உற்பத்தி 5.23 கோடி டன்னாக இருந்தது.

எனினும், 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 28.15 கோடி டன்னாக இருந்த நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 29.04 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 5.91 கோடி டன்னிலிருந்து 5.21 கோடி டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை கோல் இந்தியா வழங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.