பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மாருதி சுஸுகி விற்பனை சரிவு

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,81,782-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 1,89,082 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன பயணிகள் வாகனங்களின் மொத்த உள்நாட்டு விற்பனை 1,56,114-லிருந்து 8 சதவீதம் குறைந்து 1,43,075-ஆக உள்ளது.

ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 12,209-லிருந்து 10,648-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறியவகைக் காா்களின் விற்பனை 72,451-லிருந்து 58,051-ஆகக் குறைந்துள்ளது.

பயன்பாட்டு வாகனங்களான பிரெஸ்ஸா, எா்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகியவை அடங்கிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 58,746-லிருந்து 62,684-ஆக அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டு வாகனங்களான பிரெஸ்ஸா, எா்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகியவை அடங்கிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 58,746-லிருந்து 62,684-ஆக அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.