சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! விலை எவ்வளவு?

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள்.
சாம்சங் கேலக்ஸி எம்56 (Samsung Galaxy M56 5G)
சாம்சங் கேலக்ஸி எம்56 (Samsung Galaxy M56 5G)Samsung India
Published on
Updated on
1 min read

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்56 5ஜி இன்று வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் ரூ. 30,000-க்குள் விற்கப்படும் ஸ்மார்ட்போன் மாடல்களில் நீடித்து உழைப்பதிலும், ஸ்லிம்மான வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நிலையில், குறிப்பிட்ட விலைக்குள் இதற்கு முன்பு வெளியான மாடல்களை விட 30% ஸ்லிம்மான வடிவமைப்பில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஆண்ட்ராய்ட் 15 இயங்குதளத்துடன் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்56 ஸ்மார்ட்போனில் அடுத்த 6 ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் வரை செய்துகொள்ளமுடியும். மேலும், 6 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்ஸ் (Security patches) வழங்கப்படுகிறது. இவை, முக்கிய சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் ஏறும் வசதியுடன் வெளியிடப்பட்டுள்ளது.

6.7 இன்ச் திரையுடன் ஃபுல் ஹெச்டி + சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே (Full HD+ Super AMOLED+ display) வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G)
சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G) Samsung India

இதில் எக்சினோஸ் 1480 Exynos 1480 (Octa-core, 2.75GHz, 4nm) ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேப்பர் சேம்பர் கூலிங் (Vapor Chamber Cooling) பயன்படுத்தப்பட்டுள்ளதால் வெப்பம் குறைவாக உமிழும்.

இதன் முன்பக்க கேமராக்கள் 50 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் (அல்ட்ரா வைட்), 2 மெகாபிக்சல் ஆகிய அளவுகளில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்க கேமரா 12 மெகாபிக்சலில் வழங்கப்பட்டுள்ளது.

என்ன விலை?

இரு வகைமைகளில் வெளியாகியுள்ள இந்த மாடல் லைட் க்ரீன், பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

1. 8GB + 128GB சேமிப்பு வசதி கொண்ட மாடல் விலை ரூ. 27,999

2. 8GB + 256GB சேமிப்பு வசதி கொண்ட மாடல் விலை ரூ. 30,999

குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி தள்ளுபடி விலையிக்ல் இதனை வாங்கலாம்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்56 மாடல் விற்பனை வருகிற ஏப். 23 அன்று மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை சாம்சங் இணையதளம், அமேசான் தளம், சாம்சங் விற்பனையகத்தில் வாங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com