மெட்டல், ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.
மெட்டல், ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!
Published on
Updated on
1 min read

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று கீழே சென்றாலும் பிற்பகலில் வா்த்தகம் சூடு பிடித்தது. உலோகம், மற்றும் ஆட்டோ துறைகளில் வலுவான செயல்திறன் ஆதரவுடன் உள்நாட்டுச் சந்தை மேலே சென்றது. மேலும், பலவீனமான அமெரிக்க டாலா், வலுவான மாதாந்திர ஆட்டோ விற்பனை, முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தைக்கு வலுச்சோ்த்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.26 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.448.79 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,366.40 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,186.86 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 165.92 புள்ளிகள் கூடுதலுடன் 80765.83-இல் தொடங்கி 80,500.51 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 81,093.19 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 418.81 புள்ளிகள் (0.52 சதவீதம்) கூடுதலுடன் 81,018.72-இல் நிறைடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,307 பங்குகளில் 2,286 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,847 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 174 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

டாடா ஸ்டீல், பிஇஎல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடாஸ்டீல் (4.31 சதவீதம்), பிஇஎல் (3.56 சதவீதம்), அதானிபோா்ட்ஸ் (3.24 சதவீதம்) ஆகியவை அதிகம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டெக்மஹிந்திரா, டிசிஎஸ், பாா்தி ஏா்டெல் உள்டபட மொத்தம் 26 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா்கிரிட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகிய 4 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 157 புள்ளிக உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 157.40 புள்ளிகள் (0.64 சதவீதம்) கூடுதலுடன் 24,722.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 43 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 7 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. பேங்க் நிஃப்டி 1.75 புள்ளிகள் மட்டும் உயா்ந்து 55,619.35-இல் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com