
மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த பாதையில் செயல்பட்டதால், முக்கிய வட்டி விகிதங்கள் 'நடுநிலை' நிலைப்பாட்டுடன் மாறாமல் இருந்ததால், இன்றைய வர்த்தகத்தில், தொடர்ந்து இரண்டாவது அமர்விலும் இந்திய குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து 80,448.82 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 166.26 புள்ளிகள் சரிந்து 80,543.99 ஆகவும், நிஃப்டி 75.35 புள்ளிகள் சரிந்து 24,574.20 ஆகவும் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவிகிதம் சரிந்தன.
விப்ரோ, சன் பார்மா, ஜியோ பைனான்சியல், இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, ஆசிய பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், டிரெண்ட், அதானி போர்ட்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி-யில் சரிந்து முடிந்தன.
சன் பார்மாசூட்டிகல்ஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஐடிசி மற்றும் எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பிஇஎல், அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டிரென்ட், எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சென்செக்ஸில் உயர்ந்து முடிந்தன.
பொதுத்துறை நிறுவன வங்கி 0.6 சதவிகிதம் உயர்ந்த நிலையில் மற்ற அனைத்து துறை குறியீடுகளும் 1 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,071 பங்குகள் வர்த்தகமான நிலையில், 844 பங்குகள் உயர்ந்தும் 2,127 பங்குகள் சரிந்தும் 100 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
டிவிஸ் லேப் பங்குகள் 4 சதவிகிதம் சரிந்த நிலையில் அதன் Q1 லாபம் 27% உயர்ந்தன. இருப்பினும், லாபம் சற்று அதிகரித்தும் சி.சி.எல். நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்தன.
முதலாம் காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 121% அதிகரித்ததும், ரேமண்ட் ரியாலிட்டி பங்கின் விலை 9 சதவிகிதம் சரிந்தன.
முதலாம் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 84 சதவிகிதம் வரை சரிந்த நிலையில் ஷீலா ஃபோம் பங்குகள் 3 சதவிகிதம் வரை சரிந்தன.
கோதாவரி பவர் மற்றும் இஸ்பாட் நிறுவனத்தின் Q1 ஒருங்கிணைந்த லாபம் 24% சரிந்த நிலையில், அதன் பங்குகளில் விலை 5 சதவிகிதம் சரிந்தன.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் Q1 ஒருங்கிணைந்த லாபம் இருந்தபோதிலும் அதன் வருவாய் அதிகரித்த நிலையிலும் நிறுவனத்தின் பங்குகள் 4.5 சதவிகிதம் சரிந்தன.
காட்ஃப்ரே பிலிப்ஸ், சர்தா எனர்ஜி, விஷால் மெகா மார்ட், டெல்லிவரி, டிவிஎஸ் மோட்டார், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஷ்னைடர் இன்ஃப்ரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டன.
புதிய வெளியீடுகள்
வெளியீட்டு விலையை விட 10 சதவிகிதம் அதிகமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, என்.எஸ்.டி.எல். பங்குகள் 6 சதவிகிதம் உயர்ந்து ரூ.936 ஆக முடிவடைந்தன.
வெளியீட்டு விலையை விட கிட்டத்தட்ட 19 சதவிகிதம் அதிகமாக பங்குச் சந்தையில் அறிமுகமான ஸ்ரீ லோட்டஸ் டெவலப்பர்ஸ் பங்குகள் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.196.85 ஆக முடிவடைந்தன.
வெளியீட்டு விலையில் பட்டியலிடப்பட்ட பிறகு, எம்&பி இன்ஜினியரிங் பங்குகள் கிட்டதட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.
இதையும் படிக்க: டாடா மோட்டாா்ஸ் விற்பனை 4% சரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.