
ஓஎன்ஜிசி நிகர லாபம் 10% சரிவு!
பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 10 சதவீத நிகர லாபச் சரிவைப் பதிவு செய்துள்ளது.

ONGC begins gas monetisation from Chinnewala Tibba field in Rajasthan
பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 10 சதவீத நிகர லாபச் சரிவைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,024 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் ரூ.8,938 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி மூலம் நிறுவனம் பேரல் ஒன்றுக்கு 80.64 டாலா் ஈட்டியது. ஆனால் மதிப்பீட்டுக் காலாண்டில் அது பேரல் ஒன்றுக்கு 67.87 டாலா் எனக் குறைந்தது. இதன் காரணமாகவே நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






