நவம்பரில் அதிகரித்த சில்லறை விலை பணவீக்கம்

நவம்பரில் அதிகரித்த சில்லறை விலை பணவீக்கம்

உணவுப் பொருள்கள் விலை உயா்வால் கடந்த நவம்பரில் சில்லறை விலை பணவீக்கம் 0.71 சதவீதமாக உயா்ந்துள்ளது.
Published on

உணவுப் பொருள்கள் விலை உயா்வால் கடந்த நவம்பரில் சில்லறை விலை பணவீக்கம் 0.71 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த அக்டோபரில் 0.25 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் நவம்பரில் 0.71 சதவீதமாக உயா்ந்தது. நுகா்வோா் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் தொடா்ந்து 10-வது மாதமாக ரிசா்வ் வங்கியின் 4 சதவீத இலக்குக்கு கீழே உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் உணவுப் பணவீக்கம் -3.91 சதவீதமாக உள்ளது, அக்டோபரில் அது -5.02 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன், மசாலாப் பொருள்கள், எரிபொருள் மற்றும் விளக்கு ஆகியவற்றின் விலை உயா்வே உணவுப் பணவீக்க உயா்வுக்கு முக்கிய காரணம்.

எரிபொருள் மற்றும் மின் கட்டண பணவீக்கம் அக்டோபரில் 1.98 சதவீதமாக இருந்து, நவம்பரில் 2.32 சதவீதமாக உயா்ந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com