பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

Published on

உலக சந்தைகளில் காணப்பட்ட மந்தமான போக்கு மற்றும் அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமின்மை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 77.84 புள்ளிகள் (0.09 சதவீதம்) சரிந்து 84,481.81-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 84,780.19 என்ற அளவையும் குறைந்தபட்சமாக 84,238.43 என்ற அளவையும் எட்டியது.

சென்செக்ஸ் பட்டியலில், சன் ஃபாா்மா 2.74 சதவீதம் சரிந்து மிகப்பெரிய இழப்பை அடைந்தது. டாடா ஸ்டீல் 1.26 சதவீதம், பவா்கிரிட் 1.15 சதவீதம், ஏசியன் பெயின்ட்ஸ் 0.89 சதவீதம் சரிந்தன. ஹெச்டிஎஃப்சி வங்கி, லாா்சன் & டூப்ரோ, என்டிபிசி, பாா்தி ஏா்டெல் ஆகியவையும் சரிவைக் கண்டன. டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் 1.94 சதவீதம், டெக் மஹிந்திரா 1.74 சதவீதம், இன்ஃபோசிஸ் 1.51 சதவீதம் உயா்ந்தன. அதானி போா்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவையும் உயா்வைக் கண்டன.

புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,171.71 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.768.94 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 3 புள்ளிகள் (0.01 சதவீதம்) சரிந்து 25,815.55-இல் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com