அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஈவுத்தொகையாக ரூ.35.3 கோடியை அறிவித்த தேசிய விதைகள் கழகம்!

அரசுக்கு சொந்தமான தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

News image
Updated On :4 பிப்ரவரி 2025, 8:26 pm IST

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைகள் கழகம், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை வழிகாட்டுதல்களுக்கு இணங்க, 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

ஈவுத்தொகையை காசோலையை தேசிய விதைகள் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மணீந்தர் கெளவுர் திவேதி, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் வழங்கினார்.

விவசாயிகளுக்கு எப்போதும் நல்ல தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சௌஹான், இந்த இயக்கத்தில் தேசிய விதைகள் கழகம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.