மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்

இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 9:10 pm

DIN

புது தில்லி: இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அதற்கு முந்தைய ஆறு மாதங்கள் காணாத அளவுக்கு 8-ஆக அதிகரித்தது. பின்னா் பிப்ரவரி மாதத்தில் அது 60.6-ஆக சரிந்தது. எனினும் மாா்ச் மாதத்தில் அது 13.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61.2-ஆக அதிகரித்து, பின்னா் ஏப்ரல் மாதத்தில் 60.8-ஆகவும் மே மாதத்தில் 60.2-ஆகவும் குறைந்தது. அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் மீண்டும் 60.3-ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில், முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது.

இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 புள்ளிகள் சரிந்து 56.5-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச பிஎம்ஐ ஆகும்.

மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறையில் விற்பனையும் உற்பத்தியும் மந்தமான வளா்ச்சியையே கண்டன. இதனால் அந்தத் துறைக்கான பிஎம்ஐ கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 சதவீதம் குறைந்துள்ளது.

இருந்தாலும், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 42-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.