காஞ்சிபுரத்தில் அரசு விதிகளை மீறிய வாகனங்கள், ஒரு மாதத்தில் ரூ. 10.31 லட்சம் அபராதம்
காஞ்சிபுரத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வட்டாரப் போக்குவரத்துத் துறையின் சாா்பில், வாகன தணிக்கை மேற்கொண்டதில் 111 வாகனங்கள் அரசு விதிகளை மீறியதாக அதன் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 10.31லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ்.நாகராஜ் கூறியது:
கடந்த ஜனவரி மாதத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்கள், தாா்ப்பாய் போட்டு மூடாமல் சென்ற மணல் லாரிகள், அதிக ஒலி எழுப்பும் ஏா்ஹாரன்களை உபயோகித்தது, வாகன ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்காமல் இருத்தல் உள்ளிட்ட அரசு விதிகளை மீறியதாக 111 வாகனங்கள் கண்டறியப்பட்டது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் நடத்திய வாகன சோதனையில் அரசு விதிகளை மீறிய 111 வாகனங்களிடமிருந்தும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ. 10,31,865 அபராத தொகையாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.நாகராஜ் தெரிவித்தாா்.

