வணிகம்
கோல் இந்தியா நிகர லாபம் 17% சரிவு
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 17.4 சதவீதம் சரிந்துள்ளது.
புது தில்லி: அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 17.4 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024 டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8,491.22 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 17.4 சதவீதம் சரிவாகும். அப்போது நிறுவனம் ரூ.10,291.71 கோடி ஒருங்கிணைந்த லாபம் ஈட்டியிருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை ரூ.33,011.11 கோடியிலிருந்து ரூ.32,358.98 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

