/

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

News image
தங்கம் விலை
Updated On :18 பிப்ரவரி 2025, 4:59 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,920-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிரடியாக ரூ. 800 குறைந்து ரூ. 63,120-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,940-க்கும், ஒரு சவரன் ரூ. 63,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியில் விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 108.00-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.