உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

குறைந்த விலையில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்!

குறைந்த விலையில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு வருகின்றன.

News image

சைக்கிள்

Updated On :19 பிப்ரவரி 2025, 2:55 pm IST

தொலைத் தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்த ஜியோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் அடியெடுத்து வைக்கிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில், குறைந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தப் பணியைத்தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வு மற்றும், சுற்றுச்சூழல் மாசு போன்றவை ஏற்படுத்தும் கவலைகளிலிருந்து விடுபட ஒரே வழியாகவும் ஊரகப் பகுதி மக்களின் சிறந்த போக்குவரத்து சாதனமாகவும் இது மாறவிருக்கிறது என்று அதன் செய்திக் குறிப்பு கூறுகிறது.

48 வாட்ஸ் லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படலாம் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 45 கிலோ மீட்டர் வேகம் வரை இது ஓடும் என்பதால், இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக மாறும் என்று கருத்துகள் வந்துள்ளன. முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் என்று கணிக்கப்பட்டுளள்து.

இந்த அடிப்படை மாடல் எலக்ட்ரிக் சைக்கிள் முதல், அடுத்தடுத்த பல திறன்களை கூட்டப்பட்ட சைக்கிள்கள் வரை அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது. அடிப்படை சைக்கிள் விலை ரூ.15 ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைக்கிள் விற்பனை நிலையங்களிலும், ஆன்லைன் மூலமும் இந்த சைக்கிளுக்கு ரூ.900 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சைக்கிள், 2025ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும்,முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.