விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த ஜனவரியில் முறையே 4.61 சதவீதம் 4.73 சதவீதமாக சரிந்துள்ளது.
இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதத்தில் விவசாயிகளுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 5.01 சதவீதமாக இருந்தது. அது ஜனவரியில் 4.61 சதவீதமாக சரிந்துள்ளது.
அதேபோல், டிசம்பரில் 5.05 சதவீதமாக இருந்த ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 4.73 சதவீதமாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் சிபிஐ-ஏஎல் குறியீடு 4 புள்ளிகள் குறைந்து 1,316-ஆகவும், சிபிஐ-ஆா் குறியீடு 3 புள்ளிகள் 1,328-ஆகவும் உள்ளது.
முந்தைய டிசம்பா் மாதத்தில் அவை முறையே 1,320 புள்ளிகளாகவும், 1,331 புள்ளிகளாகவும் இருந்தன.2024-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் விவசாயிகள் பணவீக்கம் 7.52 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்கள் பணவீக்கம் 7.37 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் தொழில் உற்பத்தி வளா்ச்சி 7.3%

ஜூன் மாத மொத்த விற்பனை பணவீக்கம் 9.87%
ஜூன் மாத சில்லறை பணவீக்கம் 4.38%!

ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



