பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உச்சத்திலிருந்து 14% சரிந்த நிஃப்டி!

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி செப். மாத உச்சத்திலிருந்து 14% சரிந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 பிப்ரவரி 2025, 2:00 pm

DIN

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 27) பெரிய மாற்றமின்றி முடிந்தது. இதில் சென்செக்ஸ் பெரிய வித்தியாசமின்றி 10 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி அதன் உச்சத்திலிருந்து 14% சரிந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வங்கி, மெட்டல் துறைகளைத் தவிர்த்து மற்ற துறை பங்குகள் சரிவுப் பட்டியலிலேயே இருந்தன. ஆட்டோ, மீடியா, ஆயில் & கேஸ், ரியாலிட்டி, பவர் துறை பங்குகள் 1 - 3 சதவீதம் வரை சரிந்தன. மும்பை பங்குச் சந்தையில் இடைத்தர நிறுவனங்கள் 1 சதவீதமும் சிறு, குறு நிறுவனங்கள் 2 சதவீதம் வரையும் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 10.31 புள்ளிகள் உயர்ந்து 74,612.43 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.014 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 2.50 புள்ளிகள் சரிந்து 22,545.05 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.011 சதவீதம் சரிவாகும்.

வாரத்தின் 4வது வணிக நாளான இன்று 74,706 புள்ளிகளுடன் சென்செக்ஸ் தொடங்கியது. இன்றைய அதிகபட்சமாக 74,834 புள்ளிகள் வரை சென்றது. எனினும் 74,520 என்ற இன்றைய அதிகபட்ச சரிவையும் பதிவு செய்தது. வணிக நேர முடிவில் 10 புள்ளிகள் உயர்ந்து 74,612 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 13 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 17 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனப் பங்குகள் 2.70% உயர்ந்தன. இதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஃபைனான்ஸ் 2.56%, சன் பார்மா 2.11%, சொமாட்டோ 1.52%, நெஸ்ட்லே இந்தியா 1.24%, இந்தஸ்இந்த் வங்கி 1.21%, டாடா ஸ்டீல் 1.19%, எச்டிஎஃப்சி வங்கி1.10% உயர்ந்திருந்தன.

இதேபோன்று அல்ட்ராடெக் சிமெண்ட் -4.72%, டாடா மோட்டார்ஸ் -1.98%, எம்&எம் -1.85%, கோட்டாக் வங்கி -1.01%, எஸ்பிஐ -0.99%, என்டிபிசி -0.95% சரிந்திருந்தன.

நிஃப்டி 14% சரிவு

இதேபோன்று நிஃப்டி பட்டியலில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹ்ண்டல்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி செப்டம்பர் மாத உச்சத்திலிருந்து 14% சரிந்துள்ளது. நிஃப்டி 500 பட்டியலில் உள்ள நிறுவனப் பங்குகள் இதுவரை 17% வரை சரிந்துள்ளன.

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவது, பலவீனமான பன்னாட்டு நிறுவன வருவாய், வேகமற்ற உள்ளூர் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை சரிவுக்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.