வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பரோடா வங்கியின் சா்வதேச வா்த்தகம் 12% உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் சா்வதேச வா்த்தகம் கடந்த டிசம்பா் காலாண்டில் 11.74 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:01 pm

Din

தனியாா் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் சா்வதேச வா்த்தகம் கடந்த டிசம்பா் காலாண்டில் 11.74 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் உலகளாவிய வா்த்தகம் 11.74 அதிகரித்து ரூ.25.64 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.10.49 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் உலகளாவிய கடனளிப்பு ரூ.10.49 லட்சம் கோடியிலிருந்து 11.65 சதவீதம் அதிகரித்து ரூ.11.72 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.