ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 3% அதிகமாக சரிவு!

தேசிய பங்குச் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை இன்று 3.4 சதவிகிதம் சரிந்து ரூ.4,162.45 ஆக குறைந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 3% அதிகமாக சரிவு!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: தேசிய பங்குச் சந்தையில், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை இன்று 3.4 சதவிகிதம் குறைந்து ரூ.4,162.45 ஆக சரிந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் டிசம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை தரவுகளை அறிவித்ததையடுத்து இந்த சரிவு பதிவானது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2023 டிசம்பரில் 3,93,952 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், 2024 டிசம்பரில் 3,24,906 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2023 டிசம்பரில் 3,54,658 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, 2024 டிசம்பரில் 2,98,516 யூனிட்களாக இருந்த மோட்டார் சைக்கிள் விற்பனையின் பின்னணியில் இந்த சரிவு பெரும்பாலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூட்டர் விற்பனையும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 39,294 யூனிட்டுகளிலிருந்து குறைந்து 26,390 யூனிட்களாக சரிந்துள்ளது.

இதையும் படிக்க: ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்றது மிகப்பெரிய வெற்றி: ரிசர்வ் வங்கி

ஹீரோ மோட்டார்ஸின் உள்நாட்டு மோட்டார் சைக்கிள் விற்பனை 2024 டிசம்பரில் 2,94,152 யூனிட்களாக சரிந்தது. இது 2023 டிசம்பரில் 3,77,842 யூனிட்களாக இருந்தது. மாறாக டிசம்பர் 2023ல் ஏற்றுமதியானது 30,754 யூனிட்களாக உயர்ந்தது.

நடப்பு நிதியாண்டில் ஹீரோ மோட்டார்ஸின் விற்பனை 42,29,032-லிருந்து 45,18,642-ஆக உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனை 38,94,963-லிருந்து 42,17,249-ஆகவும், ஸ்கூட்டர் விற்பனை 3,34,069-லிருந்து 3,01,393-ஆகவும் குறைந்துள்ளது.

உள்நாட்டு விற்பனையும் நடப்பு நிதியாண்டில் 40,95,084 யூனிட்டுகளிலிருந்து 43,31,998 யூனிட்டுகளாகவும், ஏற்றுமதி 133,948 யூனிட்டுகளிலிருந்து 186,644 யூனிட்டுகளாகவும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com