ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்றது மிகப்பெரிய வெற்றி: ரிசர்வ் வங்கி

புழக்கத்தில் உள்ள ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவிகிதம் வங்கி அமைப்புக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், அத்தகைய நோட்டுகள் ரூ.6,691 கோடி மட்டும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி (கோப்புப்படம்)
ரிசர்வ் வங்கி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மும்பை: புழக்கத்தில் உள்ள ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவிகிதம் வங்கி அமைப்புக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், அத்தகைய நோட்டுகள் ரூ.6,691 கோடி மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி ஆனது ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

மே 19, 2023 அன்று வணிக முடிவில் ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, டிசம்பர் 31, 2024 அன்று வணிக முடிவில் ரூ.6,691 கோடியாக குறைந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.79-ஆக முடிவு!

இவ்வாறு, மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்திலிருந்த ரூ.2000 நோட்டுகளில் 98.12 சதவிகிதம் திரும்பப் பெறப்பட்டது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி இருந்தது. இருப்பினும், இந்த வசதி இன்னும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் உள்ளது.

பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நாட்டின் எந்த தபால் நிலையத்திலிருந்தும் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com