கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா பங்குகள் 4% உயர்வு!
மும்பை: உலகளாவிய பலவீனமான சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது இரண்டு மாத உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) மற்றும் ஆயில் இந்தியா பங்குகள் தலா 4 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில், எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை அன்று ஷி ஜின்பிங்கின் புத்தாண்டு உரையில், 2025 ஆம் ஆண்டில் வளர்ச்சியை ஊக்குவிக்க சீனா செயல்திறன் மிக்க கொள்கைகளை செயல்படுத்தும் என்றார்.
உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள், எரிபொருள் தேவையை உயர்த்தும் பொருளாதார வளர்ச்சியை, புதுப்பிக்க கொள்கை ஆதரவை அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் உயர்வதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 3% அதிகமாக சரிவு!
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 76 டாலருக்கு மேல் வர்த்தகம் ஆகும் நிலையில், அதே நேரத்தில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 73.4 டாலராக இருந்தது. இவை இரண்டும் இன்று முறையே 0.3 சதவிகிதம் மற்றும் 0.36 சதவிகிதம் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) பங்கின் விலையானது ரூ. 258.75 ஆகவும் மற்றும் ஆயில் இந்தியா பங்குகள் விலை ரூ.481.00 ஆகவும் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

